Homeவாழ்க்கை முறைதொடர்ச்சியாக ஒரு மாதம் பிளாக் காஃபி குடித்தால் உடலில் என்ன மற்றம் நடக்கும்?

தொடர்ச்சியாக ஒரு மாதம் பிளாக் காஃபி குடித்தால் உடலில் என்ன மற்றம் நடக்கும்?

பிளாக் காஃபி

வெறும் வயற்றில் காஃபி குடிப்பது, காஃபினை விரைவாக உறிஞ்சுவதற்கு வழிவகுக்கும். இது கார்டிசோல் என்கிற மன அழுத்த ஹார்மோன் அதிகரிப்புக்கு காரணமாகும்.

குறிப்பாக இது உணர்திறன் மிக்க நபர்களில் பதற்றம் நடுக்கம் மற்றும் பயம் போன்றவற்றிக்கு வழிவகுக்கும். இதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டிய நன்மைகள் மற்றும் அபாயங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

காலையில் ஒரு கப் பிளாக் காஃபியுடன் நாளை துவங்குவது பலரது வழக்கமாக உள்ளது. காஃபியின் சுவை மற்றும் காஃபின் உள்ளடக்கம் காரணமாக இது விரைவான ஆற்றல் அல்லது வளர்ச்சிதை மாற்றத்தை நாடுபவர்களுக்கு ஏற்ற பானமாக இருந்து வருகிறது.

தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தினமும் காலையில் பிளாக் காஃபி குடிக்கும்போது உடலில் என்ன நடக்கும் என்பதை பற்றி தேர்நிந்துகொள்வோம்..

நன்மைகள்

ஃ போர்டிஸ் பெங்களூருவின் மூத்த ஆலோசகரும், இரைப்பை குடல் நிபுணரும், மருத்துவருமான பிரணவ் ஹொன்னவர ஸ்ரீனிவாசன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வாயிலாக இதுகுறித்து பேசுகையில்,
“ஒருவர் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு தினமும் பிளாக் காஃபி குடிப்பதால், பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அவற்றில் பல ஆக்சிஜனேற்றிகள், காஃபின் மற்றும் வைட்டமின் B போன்ற அத்தியவசிய ஊட்டச்சத்துக்கள் வளமாக உள்ளது என கூறினார்.

தினமும் பிளாக் காஃபி குடிப்பதால் எந்த அளவிற்கு நன்மைகள் இருக்கிறதோ, அதே அளவிற்கு அவை கெடுதலையும் தரக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எனவே பிளாக் காஃபி குடிப்பதால் கிடைக்கும் உடனடி நன்மைகள் மற்றும் அதன் குறைபாடுகளை இனி விரிவாக தெரிந்து கொள்வோம்.

மேம்பட்ட மனநலன் : பிளாக் காஃபி குடிப்பதன் மூலம் கிடைக்கும் உடனடி நன்மைகளில் ஒன்று மனநலன் ஆகும். காபியில் உள்ள காஃபின், நரம்பு மண்டலத்தை மையத்தை தூண்டுகிறது. இது மூலையில் அடினோசின் ரிசெப்டர்களை தடுக்கிறது. மேலும் டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் வெளியீட்டை ஊக்குவிக்கிறது.

உடல் செயல்திறன் : காஃபின் ரத்த ஓட்டத்தில் அட்ரினலின் அளவை அதிகரிப்பதாகவும் அறியப்படுகிறது. இது உடலை, உழைப்புக்கு தயார்படுத்துவதன் மூலம் செயல்திறனை மேம்படுத்துகிறது.

அதிகரித்தது வளர்சிதை மாற்றம் மற்றும் கொழுப்பு எரித்தல் :பிளாக் காஃபி வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை 3% முதல் 11 % அதிகரிப்பதாக காட்டப்பட்டுள்ளது. மேலும் இது கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. காஃபின் உள்ளடக்கம் தெர்மோஜெனீசிஸைத் தூண்டுகிறது. இது உணவை ஜீரணிப்பதில் முதல் உடல் வெப்பத்தையும் சத்தியையும் உருவாக்கும் செயல்முறையாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆக்ஸிஜனேற்றிகளின் வளமான ஆதாரம் : காஃபியில் ஆக்ஸிஜனேற்றிகள் நிரம்பியுள்ளன. அவை உடலில் உள்ள ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகின்றன. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் வீக்கத்தை குறைத்து ஒட்டுமொத்த செல்லுலார் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

குறைபாடுகள் – அபாயங்கள்

காப்பி குடிப்பதால் ஏற்படும் குறைபாடுகள் குறித்து மருத்துவர் ஸ்ரீனிவாசன் விளக்குகிறார். அதில் காஃபின், நேர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் தொடர்புடைய டோபமைனின் வெளியிட்ட தூண்டுவதன் மூலம் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், அதிகப்படியான காஃபின் பதற்றம், அமைதியின்மை மற்றும் எரிச்சலை அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக அதிக உணர்திறன் உள்ளவர்களுக்கு இது பிரச்னையை தரக்கூடும். ஏனென்றால், காஃபின் கார்டிசோல் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது மனா அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். அதே நேரத்தில் காஃபின் துக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் அடினோசின் ரெசிப்டர்களை தடுப்பதன் மூலம் தூக்கத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர் ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.

ஏற்னவே நேரத்தை கருத்தில் கொள்ளாமல் ஒரு மாதத்திற்கு தினமும் தொடர்ந்து காஃபி குடித்தால், அது ஒட்டுமொத்தமாக தூக்க பிரச்சைக்கு வழிவகுக்கும். இதன்மூலம் அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் கணிசமாக பாதிக்கும்.

தூக்கத்தில் அதன் தாக்கத்தை குறைக்க படுக்கைக்கு செல்வதற்கு குறைந்தது 6 மணி நேரத்திற்கு முன் காஃபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் குறைபாடுகள் இல்லாமல் பிளாக் காப்பியின் நன்மைகளை அனுபவிப்பதற்கு சிவநிலையை பின்பற்றுவது அவசியம் என்று மருத்துவர் ஸ்ரீநிவாசன் கூறியுள்ளார்.

வெறும் வயிற்றில் ஏன் பிளாக் காஃபி குடிக்க கூடாது?

வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது பலருக்கும் உள்ள ஒரு பொதுவான பழக்கம் ஆகும். ஆனால், அது செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர் ஸ்ரீநிவாசன் எச்சரிக்கிறார்.

காஃபி குறிப்பாக பிளாக் காஃபி வயிற்றி அமிலத்தின் (ஹைட்ரோகுளோரிக் அமிலம்) உற்பத்தியை தூண்டும். எனவே இதனை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது, இரைப்பையில் அமிலத்தன்மையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால், அசெளகரியம், அமில ரிஃப்ளக்ஸ் அல்லது நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காஃபி குடல் அமைப்பை பாதிக்கும் என்று பொதுவாக அறியப்படுத்துகிறது. மிதமான காஃபி எடுத்துக்கொள்வது அதிகரித்த நுண்ணுயிர் பன்முகத்தன்மையுடன் தொடர்புடையது என்றாலும், வேறு வயற்றில் குடிப்பது சில நேரங்களில் குடல் பாக்ட்ரியாவில் சமநிலையின்மையை ஏற்படுத்தும். இது சிலருக்கும் வீக்கம், தசைப்பிடிப்பு அல்லது வயியற்றுப்போக்கு செரிமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img