ஆப்பிள்
ஆப்பிள் நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உதவும் வகையில் பல நன்மைகளை தருகிறது. ஆப்பிள்கள் ஒரு ஊட்டச்சத்து மிக்க பவர்ஹவுசாக உள்ளன.
இதில் வைட்டமின் சி உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் நோயெதிர்ப்பு செயல்பாடு மற்றும் கொலாஜன் உற்பத்திக்கு அவசியமானது என ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் மருத்துவர் திலீப் குடே தெரிவித்துள்ளார்.
இதய ஆரோக்கியம் – இரத்த அழுத்தம்
மேலும் ஆப்பிள்கள் இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அவசியமான கனிமமான பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக உள்ளன. ஆப்பிள்களில் காணப்படும் நார்சத்து செரிமான ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உதவுகிறது.
ஆப்பிள்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், குர்செடின் மற்றும் ஃபிளாவனாய்ட்ஸ் போன்றவை, இதய நோய், டைப் நீரிழிவு நோய் மற்றும் சில வகை கேன்சர் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களிலிருந்து பாத்துக்க உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
இதை தவிர ஆப்பிள்களில் உள்ள நார்சத்து வயிறு நிரப்பிய முழுமை உணர்வை ஊக்குவிப்பதன் மூலமும்,ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் எடை மேலாண்மைக்கு பங்களிப்பதாக மருத்துவர் திலீப் கூறியுள்ளார்.
ஆப்பிள் பழத்தின் பலன்களை முழுமையாக பெற அன்றாட வழக்கத்தில் இதனை சேர்ப்பதை கருத்தில் கொள்ள மருத்துவர் திலீப் வலியுறுத்தி உள்ளார். ஒரு ஃபிரெஷ்ஷான ஆப்பிளை ஸ்னாக்ஸாக அப்படியே சாப்பிடலாம். இல்லை என்றால் சாலட் அல்லது ஓட்மீலில் ஆப்பிள் பீஸ்களை சேர்க்கலாம்.
அல்லது சுவையான டெசெர்ட் வகைகளில் ஆப்பிள்களை சேர்த்து பேக்கிங் செய்யலாம். வழக்கமான அடிப்படையில் ஆப்பிள்களை உங்கள் டயட்டில் தவறாமல் சேர்ப்பதன் மூலம், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தலாம்.
இப்படி ஆப்பிள்களை உங்களுடைய தினசரி டயட்டில் சேர்த்துக்கொண்டால், இந்த அற்புத பழத்தின் ஊட்டச்சத்து சத்தியை நீங்கள் முழுமையாக பெறலாம். மேலும் இது உங்கள் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.