வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் இணைந்து நடித்துள்ள விடுதலை பாகம் 2 படத்தின் விமர்சனத்தை இந்த பதிவில் காணலாம் வாங்க.
விடுதலை படத்தின் கதை
விடுதலை படத்தின் முதல் பாகத்தின் இறுதியில் வாத்தியார்-ஐ (விஜய் சேதுபதி) குமரேசன் (சூரி) கைது செய்துவிடுவார். இதன்பின் துவங்கும் இந்த விடுதலை இரண்டாம் பாகத்தில், வாத்தியார் போலீஸின் காட்டுபாட்டிற்குள் வருகிறார்.
பல வருடங்களாக யாராலும் பிடிக்க முடியாத ஒருவராக இருக்கும் வாத்தியாரை குமரேசன் பிடித்தது அனைவரும் அதிர்ச்சியை கொடுக்கிறது. கைது செய்யப்பட்ட வாத்தியாரை சுனில் மேனன் (கவுதம் மேனன்) விசாரித்து வருகிறார்.
மேலும் வாத்தியாரை கைது செய்துவிட்டோம் என்றும் மேல் இடத்திற்கு தகவல் கொடுக்கிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜிவ் மேனன் இதனை அறிந்து மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், வாத்தியாரை போலீஸ் கைது செய்துவிட்டது என தகவல் வெளியே பரவ துவங்கியவுடன், வாத்தியாரை வேறொரு இடத்திற்கு மாற்றும்படி, சுனில் மேனனுக்கு உத்தரவிடுகிறார்.
வேறொரு இடத்திற்கு மாற்றப்படும் வாத்தியாரை, செல்லும் வழியில் போலீசிடம் தனது கடந்த காலத்தையும், தன்னுடைய வாழ்க்கையின் கொள்ளைகளை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
இதில் போலிஸுக்கு பல உண்மைகள் தெரியவருகிறது. வாத்தியார் என்கிற ஒரு நபருக்கு இதன்பின் என்ன நடந்தது? இதற்கெல்லாம் என்ன காரணம் என்பதே படத்தின் மற்றொரு பக்கம்.
விமர்சனம்
விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கிஷோர், சேத்தன் நடிப்பு பிரமாதம். சூரிக்கு சில காட்சிகள் என்றாலும், அனைத்திலும் ஸ்கோர் செய்கிறார். மற்ற அனைத்து நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயக்குனர் வெற்றிமாறன் தனது அரசியலை விடுதலை இரண்டாம் பாகத்தின் அழுத்தமாக பேசியுள்ளார். கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம், கிளைமாக்ஸ் காட்சி, வசனங்கள் என படம் விறுவிறுப்பாக செல்கிறது.
முதல் 40 நிமிடங்கள் மற்றும் கடைசி 40 நிமிடங்கள் படம் வெறித்தனமாக இருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி அனைவரையும் கலங்க வைத்துவிட்டது. யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகவும் அமைகிறது.
தனது தொடர் வெற்றி பயணத்தில் விடுதலை 2ஆம் பாகத்தையும் சேர்த்துள்ளார். திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு ஏற்படுவது போல் இருந்தாலும், அது பெரிதும் படத்தை பாதிக்கவில்லை. குறிப்பாக விஜய் சேதுபதியின் பிளாஷ் பேக் காட்சிகள் சில இடங்களில் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டல், மற்றும் பாடல்கள் மனதை தொடுகிறது. மற்ற அனைத்து டெக்னீஷன்களின் வேலையும் சிறப்பாக உள்ளது.
மொத்தத்தில் விடுதலை இரண்டாம் பாகம் வெற்றிமாறனின் அழுத்தமான அரசியல்