மாரடைப்பு
மாரடைப்பு என்று வரும்போது அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. அப்போதுதான் இந்த பிரச்சனையை எளிதாக கையாண்டு தீர்க்க முடியும்.
இதுதொடர்பாக கூச் பெஹார்ரை சேர்ந்த அனுபவம் வாய்ந்த மருத்துவர் பிஸ்வஜித் தத்தா கூறியதை இந்த பதிவில் காணலாம் வாங்க.
இந்த பழக்கங்கள் தான் மாரடைப்புக்கு காரணமா
மருத்துவர் பிஸ்வஜித் தத்தா கூறுகையில், “மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளை பலர் புறக்கணிக்கிறார்கள். இது பிரச்சனையை மோசமாக்கும். அடிப்படையில்,எந்த வேலை செய்யதாலும் மார்பின் நடுவில் அல்லது இடது பக்கத்தில் அழுத்தம் அல்லது வலி இருக்கும்.
இருப்பினும், சிறுது நேரத்தில் அந்த வலி நீங்கிவிடும். இது ஒரு ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலையில், பல அதை வாயு வலி என குழப்பிக்கொள்கிறார்க.
இருப்பினும், எந்த வேலையும் செய்யாமல் கூட வாயு வலி ஏற்படலாம். எனவே, இதுபோன்ற வலியை நீங்கள் அனுபவித்தாள், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
ஆரோக்கியமான அல்லது சரியான வாழ்க்கை முறையை பின்பற்றாதது தான், இந்த பிரச்சனைக்கான காரணங்களில் ஒன்றாகும்.
அதிபதியான துரித உணவுகளை சாப்பிடுவது, சிகரெட் புகைப்பது, மது அருந்துவது மற்றும் வாழ்க்கையில் மன அழுத்தத்தை அதிகரிப்பது போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
இருப்பினும் கீழே கூறப்போகும் விஷயங்கள் அனைத்தையும் சரியாக பின்பற்றினால் இந்த பிரச்சனை நீங்கும். போதுமான உணவை உண்ண வேண்டும். அதிக பச்சை காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
மேலும் பருவகால பழங்களை சாப்பிட வேண்டும். இருப்பினும், கூட உங்களது உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இன்று நவீன மருத்துவ முறைகள் மூலம் பல உயிர்களை காப்பற்ற முடியும். இருப்பினும், சரியான நேரத்தில் சிகிச்சை பெறாததால் பலரும் இறக்கின்றனர்.
எனவே, மருத்துவர் கூறிய அனைத்து விஷயங்களையும் மனதில் கொண்டு உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தால், இந்த பிரச்சனையை தவிர்ப்பது எளிதாக இருக்கும். இதன் விளைவாக இனிமேல் உங்களுக்கு மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.