Homeசினிமாஅமரன் படத்தின் திரைவிமர்சனம்

அமரன் படத்தின் திரைவிமர்சனம்

இந்திய ராணுவத்தில் உள்ள 44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸில் மேஜராக பணிபுரிந்து நாட்டிற்க்காக உயிர்நீத்தவர் முகுந்த் வரதராஜன். அவரும் அவருடைய மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் இருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் அமரன்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சாய் பல்லவி இருவரும் இணைந்து நடித்த இப்படத்தை கமல் ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இன்று வெளிவந்துள்ள அமரன் படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் காண்போம்.

அமரன் படத்தின் கதை

இராணுவத்தில் சேரவேண்டும் என்பதை வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டுள்ளார் சிவகார்த்திகேயன் {முகுந்த் வரதராஜன்} .

கல்லூரியில் படித்து வந்த நேரத்தில் சாய் பல்லவியை {இந்து ரெபேக்கா வர்கீஸ்} சந்திக்க இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது. ஒரு பக்கம் இராணுவம் மறுபக்கம் காதலித்து பெண்ணுடன் திருமணம் நடக்க, இருவருக்கும் அழகிய பெண் குழந்தை பிறக்கிறது.

இராணுவத்தில் சேரும் சிவகார்த்திகேயன் முதலில் லெப்டினென்ட் ஆக பணிபுரிகிறார். பின் கேப்டன் அதன்பின் 44 ராஷ்ட்ரியா ரைபிள்ஸில் மேஜராக பதவி ஏற்கிறார்.

அல்டாப் பாபா எனும் பயங்கரவாதியை என்கவுண்டர் செய்ய, பின் தான் சிவகார்த்திகேயனுக்கு கடும் எதிரி எழுகிறார். இதன்பின் என்ன நடந்தது என்பதே அமரனின் மீதி கதை.

அமரன் விமர்சனம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர். எதார்த்தமான நடிப்பு அனைவரையும் நெகிழ வைத்துவிட்டது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் திரைக்கதை படத்தை தொய்வு இல்லாமல் கொண்டு செல்கிறார். உண்மை சம்பவகளை மையமாக வைத்து எடுக்கபட்ட இப்படத்தில் கமர்ஷியலாக பெரிதும் சேர்க்காமல் எடுத்துள்ளார்.

அதுவே இப்படத்தின் எதார்த்தத்தை கண்முன் நிறுத்துகிறது. முகுந்த் – இந்து இருவருக்கும் இடையே உள்ள காதல் காட்சிகள் அழகாக இருக்கிறது. அதை விட தனது கணவரின் உயிர் ஆபத்தில் இருக்கிறது என்று தெரிந்தவுடன் சாய் பல்லவி நடித்த நடிப்பு அனைவரும் கலங்க வைக்கிறது.

அதை விட கிளைமாக்ஸ் காட்சியில் தனது கணவரின் மரண செய்தியை கேட்டு உடைந்து அழும் காட்சிகளும், அதன்பின் இராணுவ வீரரின் மனைவி கலங்க கூடாது, எப்போது தலைநிமிர்ந்து இருக்க வேண்டும் என கம்பிரத்துடன் நடித்த காட்சிகளும் உணர்வுபூர்வமாக இருக்கிறது.

சாய் பல்லவி படத்தின் மிகப்பெரிய பலம். இப்படியொரு படத்தை எடுத்ததற்கு கமல் ஹாசன் அவர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவு படத்தின் முக்கிய பலன் என்று தான் சொல்லவேண்டும். அழகாகவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளிலும் காஷ்மீரை சிறப்பாக காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சாய்.

இது அவருடைய முதல் படம் என்று சொன்னால் யாராலும் நம்பவே முடியாத. அந்த அளவிற்கு சூப்பராக எடுத்துள்ளார்.படத்தொகுப்பு படத்தை விறுவிறுப்பாக காட்டுகிறது.

குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக எடிட்டி செய்யப்பட்டுள்ளது. சண்டை காட்சிகள் வேற லெவல். படத்தில் சொதப்பல் என்று எதுவும் இல்லை.

ஆனால், சில இடங்களில் லேசாக ஸ்லோ ஆனது போல் உணர முடிந்தது. மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு மட்டுமல்லாமல் இதுவரை இந்திய நாட்டிற்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கும், அவர்களுடைய குடும்பத்திற்கும் சிறந்த சமர்ப்பணம் ஆகும். மொத்தத்தில் அமரன் மனதில் நின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img