நமது அகத்தின் அளவு நம் முகத்தில் தெரியும் என சொல்வார்கள். இதனால் தான் பலர் தங்கள் முக அழகை பராமரிக்க பல அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எனினும் சிலர் சரும ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க தவறுவதன் காரணமாக அவர்கள் உண்மை வாயதை விட அதிக வயதானமவர்களாக தோற்றமளிக்கிறார்கள்.
நம் சருமத்தை ஆரோக்கியமாக மற்றும் பொலிவுடனும் வைத்திருக்க உதவும் ஒரு உலர் பழத்தை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்த்து தெரிந்துகொள்ள போகிறோம்.
உலர் திராட்சை
நாம் இந்த பதிவில் பார்க்கப்போவது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உலர் திராட்சையை பற்றி தான். நமது சருமத்தை பளபளப்பாக வைத்திருப்பதில் உலர் திராட்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உலர் திராட்சையில் வைட்டமின் E, வைட்டமின் C இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நமது சரும திசுக்களை சரிசெய்து சேதமடைந்த சருமத்தை மேம்படுத்துகிறது.
அதே போல் உலர் திராட்சைகள் சருமத்தை பளபளப்பாக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வற்றில் போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளது. இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவுகிறது.
உலர் திராட்சைகள் அன்டி-ஆக்சிடன்ட்ஸ் பண்புகள் நிறைந்தவை. இவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகின்றன. உலர் திராட்சை நீரை முகத்தை டோனராக பயன்படுத்துவது முகப்பரு மற்றும் தழும்புகளை போக்க உதவுகிறது.
உலர் திராட்சை நீரை சருமத்தில் தடவுவதால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். வயதானாலும் கூட சருமத்தை இளைமையாக வைத்திருக்க இது உதவுகிறது.
சரும சுருக்கங்கள் மற்றும் மந்தமான சரும பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு, இந்த உலர் திராட்சை தண்ணீர் மிகவும் நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உலர் திராட்சை தண்ணீரை எப்படி தயாரிப்பது
ஒரு பாத்திரத்தில் 15 முதல் 20 உலர் திராட்சைகளை எடுத்து, அவற்றை நன்றாக கழுவி, பின் ஒரு கண்ணடி பாத்திரத்தில் போட்டு, அதில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை சேர்க்கவும். இரவு முழுவதும் உலர் திராட்சைகளை ஊற வைக்கவும்.
பின் காலையில், எழுந்ததும், இந்த தண்ணீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். பின் இந்த தண்ணீரை உங்கள் முகம் மற்றும் கைகளில் தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
இப்படி செய்வதன் மூலம் உங்கள் சருமம் பளபளப்பாகி, முகத்தில் உள்ள முகப்பருக்கள் மறைந்துவிடும். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இப்படி செய்வதன் மூலம் சருமத்தில் நல்ல பலன்களை பார்க்க முடியும்.
சரும பளபளப்பு மற்றும் மென்மையை பராமரிக்க இயற்கையான, மலிவான வழி இதுவாகும். உலர் திராட்சை தண்ணீர் சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் ஆரோக்கியமான, அழகான சருமத்தை பெற முடியும்.