Homeசினிமாநடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது..

நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது..

தாதா சாகேப் பால்கே

மலையாள நடிகரான மோகன்லால் திரை துறையில் ஆற்றிய பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளிவந்துள்ள அறிக்கையில்,

தாதா சாகேப் பால்கே விருது தேர்வு குகுவின் பரிந்துரையின் பேரில், நடிகர் மோகன்லாலுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்.

இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் கவுரவிக்கப்படுகிறார். இந்த விருது வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் மிதுன் சக்ரவத்திக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அமைச்சர் பாராட்டு

தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள நடிகர் மோகன்லாலுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். மேலும், அவர் அவரது படைப்புகளை பாராட்டியுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மோகன்லாலின் பல்துறைத்திறனுக்கு சிறந்த எடுத்துக்காட்டு. பல ஆண்டுகளாக தனது சிறந்த படைப்புகளுடன், மலையாள சினிமா, நாடகத்துறையில் முன்னணி இருப்பவர்களில் ஒருவராக அவர் திகழ்கிறார்.

மேலும் கேரளா கலாச்சாரத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் அவர் நடிப்பை வழங்கியுள்ளார். பல்வேறு ஊடகங்களில் அவரது சினிமா மற்றும் நாடக திறமை உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது” என கூறியுள்ளார்.

மேலும், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்கள் என்றும், அவரது சாதனை வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும் என்றும் தெரிவித்துள்ளார் மோடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img