மக்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அறிமுகம் தேவையில்லை. தொலைக்காட்சியில் இருந்து சினிமா துறைக்கு வந்தவர். இவர் நடிப்பில் வெளிவரும் படங்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ளது. அடுத்த தளபதி இவர் தான் என்கிற பேச்சு நிலவி வருகிறது. அதற்கு ஏற்றார் போல் கோட் படத்தில் துப்பாக்கியை பிடிங்க சிவா என விஜய் கூறிய வசனமும் அமைந்தது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கடைசி படம் அமரன். உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இப்படம் ஹிட்டானது. 300 கோடிக்கும் மேல் வசூல் என திரை வட்டாரத்தில் உள்ள முக்கிய புள்ளிகள் கூறுகின்றனர். அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் திரைப்படம் தான் மதராஸி.
ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் சிக்கந்தர் படம் வெளிவந்து படுதோல்வியடைந்த நிலையில், மதராஸி மாபெரும் வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வசூலிலும் மாபெரும் சாதனை படைக்கும் என திரையுலகினர் எதிர்பார்க்கின்றனர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விக்ராந்த், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜாம்வல், பிஜு மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். அதன்படி, சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளிவரும் என அறிவித்துள்ளனர்.