கற்பூரவள்ளி
நம்மை காக்கும் வாசனைமிக்க அற்புத மூலிகைகளில் முக்கியமான ஒன்று கற்பூரவள்ளி. இது நமது முன்னோர்களால் பாரம்பரியமாகவே பயன்படுத்தப்பட்டு வரும் திறந்த மூலிகைகளில் ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளித்தொல்லை பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அனைவராலும் கற்பூரவள்ளி பயன்படுகிறது.
கற்பூரவள்ளிக்கு ஓமவள்ளி என்கிற பெயரும் உண்டு. இது தமிழ் மருத்துவ முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கற்பூரவள்ளி புத்தர் செடி போன்று வளர்ந்து தமிழகமெங்கும் பரவலாக கிடைக்கப்பெறும் மூலிகையாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதை வீடுகளிலும், மருத்துவ மூலிகை தோட்டங்களிலும் மிக எளிதாக வளர்க்கமுடியும். அனைத்து தட்பவெப்பநிலையையும் தாங்கி வளரும் இயல்புடையதால் கற்பூரவள்ளி ஆண்டு முழுவதும் கிடைக்கப்பெறும் தாவரமாகும்.
குறிப்பாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற வெப்ப மண்டல நாடுகளிலும் காணப்படும்.
இது சுமார் 50 CM முதல் 100 CM உயரம் வரை வளர கூடியவை. இதன் இலைகள் நல்ல பசுமை நிறத்துடன் சற்று தடித்து காணப்படும். இதில் ஊதா அல்லது மஞ்சள் கலந்த வெள்ளை நிற போக்கை காணப்படும். இதன் இலைகள் கற்பூரம் போன்ற வாசனையை கொண்டிருக்கும். இது காரணமாக மற்றும் துவர்ப்பு சுவையை உடையது.
கற்பூரவள்ளியில் விட்டமின் ஏ,சி நிறைந்து காணப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளன.
மேலும், இதில் ஆல்பா லினோலினிக் அமிலம், கார்வாக்ரோல், திமோல், பைனின், எருசலினி அமிலம், ஒமேகா -3, கொழுப்புச்சத்துள்ள உள்ளது. கற்பூரவள்ளி பல்வேறு மருத்துவ பண்புகளை பெற்று சிறந்து விளங்குவதற்கு இதுவே முக்கிய காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கற்பூரவள்ளியின் மருத்துவ நன்மைகள்
மழை காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் சார்ந்த பிரச்சனைக்கு இயற்கையின் வரப்பிரசாதமாக கற்பூரவள்ளி பயன்படுகிறது. மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று, நாசி அடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கும் கற்பூரவள்ளி உதவுகிறது.
ரத்த அழுத்தம் கட்டுப்பாடு மற்றும் சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்கவும் கற்பூரவள்ளி பயன்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். விட்டமின் ஏ மற்றும் சி இவை கொண்டுள்ளதால் தோல் சார்ந்த பிரச்சைகளுக்கு நல்ல ஒரு தீர்வாக இருக்கிறது. மேலும் கண் பார்வையை மேம்படுத்தவும் இது சிறந்து விளங்கி வருகிறது.
நார்ச்சத்து நிறைந்துள்ளதால் செரிமான பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வாக கற்பூரவள்ளி பயன்படுகிறது. மேலும், மூட்டுவலி பற்சிதைவு, ஈறுகள் சார்ந்த பிரச்சனைகள், இதயத்தை பாதுகாத்தல் என பல மருத்துவ பயன்களை கற்பூரவள்ளி தரக்கூடியது.
கற்பூரவள்ளியை பயன்படுத்தும் முறை
நான்கு முதல் ஐந்து கற்பூரவள்ளி இலைகள் வரை எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம். கற்பூரவள்ளி இலைச்சாற்றினை தேனுடன் கலந்து உட்கொள்ளலாம். நாசி அடைப்பு மற்றும் அதிக சளித்தொல்லையால் பாதிக்கப்படுபவர்கள் கற்பூரவள்ளியை கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்து பயனடையலாம்.
வாய் துர்நாற்றத்தால் அவதிப்பட்டால், கற்பூரவள்ளி இலையை சாப்பிடலாம். இது ஒரு சிறந்த Mouth freshener ஆகும். தினமும் காலையில் ஒரு கற்பூரவள்ளி இல்லை சாப்பிட்டு வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கும்.
இத்தகைய நன்மையளிக்கும் கற்பூரவள்ளியினை நீங்கள் பயன்படுத்தினால் கண்டிப்பாக வாழ்க்கை முறையில் நல்ல மற்றம் ஏற்படும் என கூறப்படுகிறது.