தண்ணீர்
நமது உடலை ஆரோக்கியமாகவும், நீர்ச்சத்து மிக்கதாகவும் வைத்திருக்க தண்ணீர் குடிப்பது அவசியம் ஆகும். கோடை காலத்தில் நிறைய தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனால் சோர்வை குறைத்தல்,மனநிலையை மேம்படுத்துதல் மற்றும் எடை இழப்பில் உதவுதல் போன்ற பல நன்மைகள் கிடைக்குமாம்.
ஒவ்வொரு நாளும் அனைவரும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும் என பலரும் கூறுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள்.
ஆனால், சமீபகாலமாக அதிகமாக தண்ணீர் குடிப்பதும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் மிதமான அளவில் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாள் முழுவதும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். ஆனால் ஒருவருக்கு இதய பிரச்சனை இருந்தால், அவர்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், அது அவர்களின் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதய நோயாளிகள் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? ஏன் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது என தொடர்ந்து பார்ப்போம்.
நம் உடலில் நீர்ச்சத்து மிக்கதாக வைத்திருப்பதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உள்ளது. இதய நோயாளிகள் தங்கள் உடலில் சோடியம், பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்ற தாதுக்களின் சமநிலையை பராமரிப்பது மிகவும் முக்கியமாகும். அதிகமாக தண்ணீர் குடிப்பது இந்த சமநிலையை சீர்குலைத்து, ஆபத்தை ஏற்படுத்தும்.
சரி, அப்போது இதய நோயாளிகள் கோடை காலத்தில் ஒரு நாளைக்கு எவ்வளவு தான் தண்ணீர் குடிக்க வேண்டும்..? அதை பார்க்கலாம் வாங்க.
அதிகமாக தண்ணீர் குடிப்பது இதய நோயாளிகளின் பம்ப் செய்யும் திறனை குறைகிறது. எனவே, கோடை காலத்தில் இதய நோயாளிகள் 2 லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்திக்கிறார்கள்.
மேலும் வித்யா நோயாளிகள் மற்ற பானங்களை குடிப்பதற்கு முன்பு மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்பதும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.