Homeவாழ்க்கை முறைமூன்று நாட்களுக்கு ஸ்மார்ட்போனை பயன்படுத்தவில்லை என்றால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா

மூன்று நாட்களுக்கு ஸ்மார்ட்போனை பயன்படுத்தவில்லை என்றால் உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா

ஸ்மார்ட்போன்கள்

ஸ்மார்ட்போன்கள் போன்ற தொழில்நுட்பம் நம் வாழ்வில் நீக்கமுடியாத அங்கமாக மாறிவிட்டாலும், அவை ஏற்படுத்தும் தீங்குகளை பற்றி பெரும்பாலும் சிந்தித்து பார்ப்பதே இல்லை.

இருப்பினும், ஒரு புதிய ஆய்வு, ஸ்மார்ட்போன் பயன்பாட்டை வெறும் 3 நாட்களுக்கு குறைப்பதால் நம்முடைய மூலையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட்போனுக்கு அடிமையாவது நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் குறிப்பாக நமது சித்திக்கும் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உடலில் நடக்கும் மாற்றங்கள்

இந்த கோட்பாட்டை சோதிக்க, 25 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 72 மணி நேரம் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அவசர காலங்களில் மட்டுமே தங்கள் தொலைபேசிகளை பயன்படுத்துமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த குறிப்பிட்ட காலத்திற்கு முன்னும், பின்னும், ஆய்வில் பங்கேற்ற இளைஞர்கள் கொடுக்கப்பட்ட பல பணிகளை நிறைவு செய்தனர். பின், அவர்களின் மூளை செயல்பாட்டை பகுப்பாய்வு செய்ய MRI ஸ்கேன் செய்யப்பட்டது.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டை தற்காலிகமாக குறைத்தால் கூட மூலம் வேதியியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை வைவகுத்தது என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்த ஒரு விதியத்திற்கும் அடிமையாகும் பழக்கவழக்கங்களை கட்டுப்படுத்திடும் மூளையின் பகுதி குறைவான செயல்பாட்டுக்கு மாறியது.

இதன் விளைவாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதற்கான தீவிர ஆசை குறைத்தது. மூளையின் இந்த பகுதி மது அல்லது ஆபாசம் போன்ற பிற போதை பழக்கங்களுக்கு அடிமையாவதற்கு காரணமான பகுதியை போன்றது.

ஸ்மார்ட்போன் பயன்பாட்டை 72 மணி நேரம் கட்டுப்படுத்தியதன் மூலம், பங்கேற்பாளர்கள் இந்த ஏக்கங்களின் தீவிரத்தில் குறைவை அனுபவித்தனர். மூலம் அமைதியாகவும், குறைவான எதிர்விளையாற்றல் செய்யக்கூடியதாகவும் மாறியது.

இந்த மாற்றங்கள் மேம்பட்ட செறிவு மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டுடன் தொடர்புடையவை ஆகும். இது ஸ்மார்ட்போன்களிலிருந்து அடிக்கடி கொஞ்ச நேரம் இடைவெளிகளை எடுப்பதன் நேர்மறையான தாக்கத்தையும் அவசியத்தையும் எடுத்துக்காட்டுகின்றன.

ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள்

கண்களில் பிரச்சனைகள் : நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பது கண் சோர்வு, வறட்சி மற்றும் பார்வை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தூக்கமின்மை : இரவில் வெகு நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கொண்டிருப்பதால், அதன் திரை வெளிச்சம் மூளையின் மெலட்டோனின் உற்பத்தியை குறைத்து, தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது.

கழுத்து & முதுகு வலி : பல மணி நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் கழுத்து மற்றும் முதுகு வலி ஏற்படலாம்.

கதிர்வீச்சு விளைவுகள் : நீண்ட கால ஸ்மார்ட்போன் பயன்பாடு கதிர்வீச்சு விளைவுகள் மூலம் உடல்நலனில் அபாயங்கள் ஏற்படுத்தும்.

ஆர்வம் மற்றும் போதை : நீண்ட நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது ஒரு போதைப்பொருளாக மாறி ஒரு நபரின் வாழ்க்கை முறையை சேதப்படுத்தும்.

உளவியல் ரீதியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் : அதிக நேரம் ஸ்மார்ட்போனில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் மனசோர்வு, தனிமை மற்றும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

எனவே உங்களுடைய வாழ்க்கை முறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் உடல்நலனுக்கு நன்மையை தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img