கோடை காலம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த காலகட்டத்தில் சளி, நீரிழப்பு, சோர்வு, தலைவலி மற்றும் செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
குறிப்பாக சில உணவுகள் கோடை காலத்தில் நோய்க்கு வழிவகுக்கும் என சொல்லப்படுகிறது. எனவே, கோடையில் ஆரோக்கியமாக இருக்க, நீங்கள் சில உணவுகளை தவிர்க்கலாம். அவை என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
உப்பு
கோடை காலத்தில் அதிக உப்பு எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். அதிகப்படியான உப்பு உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம், உடலில் வீக்கம் மற்றும் இதய நோய்க்கு வழிவகுக்கும். சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கோடை காலத்தில் உப்பு எடுத்துக்கொள்வது குறைப்பது நல்லது என கூறப்படுகிறது.
தேநீர் – காஃபி
தேநீர் மற்றும் காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கோடையில் அவற்றை அதிகமாக உட்கொள்வதால், உடல்நல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
அவற்றை வெப்பமான தன்மை காரணமாக, உடல் வெப்பநிலை அதிகத்து செரிமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே தேநீர் மற்றும் காஃபி பதிலாக எலுமிச்சை சாறு மற்றும் மோர் போன்ற குளிர் பானங்களை உட்கொள்வது நல்லது என சொல்லப்படுகிறது.
ஊறுகாய்
கோடையில் ஊறுகாய் சாப்பிடுவது உடலில் நீர் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. மேலும் அஜீரணம் மற்றும் புண்கள் போன்ற பிரச்சனைகள் உடலில் அதிகரிக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மிளகாய்
கோடையில் மிளகாய் அதிகமாக சாப்பிடுவது உடலில் பித்தத்தை அதிகரித்து, நீரிழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். உங்களுக்கு அதிக வியர்வை மற்றும் உங்கள் தோலில் தடிப்புகள் கூட ஏற்படலாம். எனவே கோடையில் காரமான உணவுகளை குறைப்பது உடலுக்கு மிகவும் நல்லதாகும்.
வறுத்த உணவுகள் மற்றும் கிரில் செய்யப்பட்ட உணவுகள்
பர்கர், பீட்சா, சிப்ஸ், சமோசா போன்ற உணவுகள் கோடையில் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அவை செரிமான பிரச்சனைகள் மற்றும் நீரிழப்பை ஏற்படுத்தும் என கூறுகின்றனர். ஆகையால் அவைகளை கோடையில் தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.
அதே போல் கோடையில் கிரிலில் வறுத்த இறைச்சியை சாப்பிடுவது உடல் வெப்பநிலையை மேலும் அதிகரித்து, நீரிழப்பு அபாயத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
டார்க் சாக்லேட்
பலரும் விரும்பி உண்ணும் டார்க் சாக்லேட்டில் காஃபின் அதிகமாக உள்ளது. கோடையில் இதை அதிகமாக சாப்பிடுவது வயிற்றுபோக்கு, எரிச்சல் மற்றும் இதய துடிப்பை ஏற்படுத்தும் என்கின்றார்கள். மேலும் நீரிழப்பு ஏற்படும் அபாயமும் இதில் உள்ளது.
இதுவரை கோடையில் ஆரோக்கியமாக இருக்க, எந்தெந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என பார்த்தோம். இந்த உணவுகளை எல்லாம் தவிர்த்து, சோம்பலை தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது சிறந்ததாகும்.
பொறுப்பு துறப்பு : இங்கு வழங்கப்பட்டிருக்கும் தகவல் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை இல்லை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையை பெற வேண்டும். samugavalai.com இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.