Homeசினிமாபாலிவுட் படத்தில் நடிக்க நடிகை சிட்னி ஸ்வீனிக்கு அழைப்பு! ரூ. 530 கோடி சம்பளம்..

பாலிவுட் படத்தில் நடிக்க நடிகை சிட்னி ஸ்வீனிக்கு அழைப்பு! ரூ. 530 கோடி சம்பளம்..

சிட்னி ஸ்வீனி

இளைஞர்களின் மனம் கவர்ந்த ஹாலிவுட் நாயகியாக சிட்னி ஸ்வீனி, விரைவில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் நடித்த பிரபலமான படங்கள்

ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார் சிட்னி ஸ்வீனி. இவர் The Voyeurs, Anyone but You, Madame Web, Immaculate, Eden, Christy என பல திரைப்படங்கள் நடித்துள்ளார். சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் The Housemaid. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

பாலிவுட் அறிமுகம்

ஹாலிவுட் திரையுலகில் நடிகையாக கொடிகட்டி பறந்துவரும் நடிகை சிட்னி ஸ்வீனி விரைவில் பாலிவுட் பக்கம் தலைகாட்ட உள்ளார். பாலிவுட்டில் இருந்து ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடிக்க, நடிகை சிட்னி ஸ்வீனிக்கு அழைப்பு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்காக ரூ. 530 கோடி சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்படுகிறது, இது இந்திய சினிமா வரலாற்றிலேயே மிகவும் உயர்ந்த தொகையாகும்.

படப்பிடிப்பு குறித்து வெளிவந்த தகவல்

இப்படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் துபாயில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இதற்கான எதிர்பார்ப்பு ஏராளமாக உள்ளது.

சமீபத்தில் நடிகை சிட்னி ஸ்வீனி குறித்து வைரலாக தகவல்

சமீபத்தில் சிட்னி ஸ்வீனி சோப் ஒன்றை அறிமுகப்படுத்தி இருந்தார். இந்த சோப், நடிகை சிட்னி ஸ்வீனி குளிக்கும் நீரில் இருந்து வரும் துளிகளை கொண்டு தயாரிக்கப்படுவதாக அறிவித்தனர். அது உலகளவில் படுவைரலானது. சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்த சோப்பின் விலை 8 அமெரிக்க டாலர் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img