ஆரோக்கியத்தை பொறுத்த வகையில் மருத்துவர்கள் முதல் ஊட்டச்சத்து நிபுணர்கள் வரை அனைவருமே, காய்கறிகள் மற்றும் பலன்களையே முதல் தேர்வாக பரிந்துரைக்கின்றனர்.
அதே நேரத்தில் ஊட்டச்சத்துக்களின் மற்ற மூலங்களாக கோழி, ஆட்டுக்கறி போன்றவையும் மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால், இதில் ஆட்டுக்கறியை அதிகளவு உண்பதால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், புரோட்டீன் அதிகமாக எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் பொதுவாக கோழி இறைச்சியை உண்பது வழக்கம்.
அதே வேளையில், அசைவ பிரியர்களின் முக்கிய தேர்வாக பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த மீன்களும் மற்ற கடல் உணவுகளும் இருந்து வருகிறது.
போனோ மீன்
மீனை வழக்கமாக உண்ணும் பட்சத்தில், அவை ஒட்டுமொத்த உடல் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
இந்த நிலையில், ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படும் ஒரு மீனை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். வைட்டமின்கள், தாதுக்கள், நோய் எதிர்ப்பு சத்தி, தோல் ஆரோக்கியம் போன்றவற்றுக்கு உதவும் போனோ மீனை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
போனோ மீனில் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. எலும்புகள் மற்றும் பற்களுக்கு நல்லது. போனோ மீனில் ஏராளமான புரோட்டீன், வைட்டமின் A, வைட்டமின் D, கால்ஷியம், பாஸ்பரஸ், அயோடின், மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்றவையும் உள்ளது.
போனோ மீனை சாப்பிடுவதன் நன்மைகள்
மோனோ மீனில் இருக்கும் வைட்டமின் A, கண் பார்வையை கூர்மையாக்குகிறது. மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதே நேரத்தில், விழித்திரை மற்றும் கண்ணில் வெளிப்புற அடுக்கையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வைட்டமின் A குறைபாடு குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.
இதில் வைட்டமின் E நிறைந்திருப்பதால், இது சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது மற்றும் வயதாவதை எதிர்த்து போராட உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் வைட்டமின் E அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
போனோ மீனில் உள்ள புரோட்டீன் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு, பசியை கட்டுப்படுத்தி நீண்ட நேரத்திற்கு நிறைவான மனநிலையை கொடுக்கிறது. மற்றும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆரோக்கியமான இதயத்திற்கு ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தேவை. நமது உடல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்யாததால், சீரான உணவில் இருந்து அதனை பெறுவதை உறுதி செய்வது முக்கியம். இது மூளையின் செயல்பாடு மற்றும் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தோராயமாக 100 கிராம் போனோ மீன், 106 கலோரிகளை வழங்கும் என்று கூறப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு ஊட்டச்சத்து மூலமாக கருதப்படுகிறது.