நம்முடைய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்ளப்படும் பூண்டு சுவையை அளிப்பதோடு, ஏராளமான மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.
நம் ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவும் என பல மருத்துவ குணங்களை வழங்கும் ஊட்டச்சத்துக்களால் பூண்டு நிரம்பியுள்ளது.
பூண்டில் உள்ள நன்மைகள்
வைட்டமின்கள் A,B,C போன்ற மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் பூண்டில் உள்ளன. அதே போல் சல்ஃப்யூரிக் ஆசிட், இரும்பு, கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு மற்றும் புரதங்களும் இதில் அடங்கி உள்ளது.
பூண்டில் உள்ள இந்த சத்துக்கள் நம் உடலில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்க உதவுகின்றன. இதை தவிர பூண்டு நம் உடல் வெப்பநிலையையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
பல ஆரோக்கிய நன்மைகள் வழங்கும் பூண்டு முக்கியமாக சளி, இருமல், நிமோனியா, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இதை தவிர இதய ஆரோக்கியத்தை பூண்டு மேம்படுத்த உதவுகிறது.
உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பூண்டுகளில் உள்ள ஆண்டிபயாடிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இதனால் தலைவலி, மராத்தி மற்றும் வாந்தி போன்ற பாதிப்புகள் குறைகின்றன.
அதே போல் பூண்டில் அடங்கி உள்ள ஊட்டச்சத்துக்கள் இதயம் சார்ந்த பாதிப்புகள் அல்லது பிரச்சனைகளை குறைகின்றன. எனவே குறிப்பாக உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி தங்கள் டயட்டில் இதுபோன்று சேர்த்து கொள்வது மிகுந்த நன்மை பயக்கும்.
முக்கியமாக பல் வலிக்கு பூண்டு உதவுகிறது. ஆம், பூண்டில் கால்ஷியம் கொண்டுள்ளது மற்றும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
எனவே இவை பல் வலியை குறைக்க உதவுகிறது. உங்களுக்கு பல் வலி இருக்கும்போது, ஒரு சிறிய பீஸ் பூண்டை நசுக்கி, பல் வலிக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
கோடை காலங்களில் பூண்டுகளை வழக்கம் போல பயன்படுத்தலாமா என்கிற சந்தேகம் சிலருக்கு இருக்கும். ஆனால், கோடையில் பூண்டை பயன்படுத்துவது எந்த ஒரு தீங்கும் ஏற்படுத்தாது என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனினும் மிதமான அளவில் பூண்டை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்கள்.
அதிகமாக பூண்டு சாப்பிட்டால் என்ன ஆகும்?
ஏனென்றால் உடலின் வெப்பத்தை அதிகரிக்கும் பண்புகளை பூண்டு கொண்டுள்ளது. கோடை சீசனில் அதிக அளவு பூண்டை எடுத்து கொள்வது ஒவ்வாமை போன்ற சில பிரச்சனைகளை ஏற்படுத்தும். கோடையில் அதிக பூண்டை எடுத்துக்கொள்வது உடல் வெப்பநிலையை அதிகரித்து அசௌகரியத்திற்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மேலும் பூண்டுகளில் காணப்படும் அல்லிசின் என்கிற கலவையை அதிகமாக எடுத்துக்கொள்வது கல்லீரலை சேதப்படுத்தும். எனவே அதிகமாக, குறிப்பாக பச்சையாகவும் பூண்டு சாப்பிடுவது என்பது எப்போதுமே நல்ல யோசனை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சுருக்கமாக சொன்னால், பூண்டு அதிக சத்தானது மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையது. எனினும் நீங்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் சில தேவையற்ற பக்கவிளைவுகளை எதிர்கொள்ள நேரிடலாம் என சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.