கம்ப்யூட்டர் பயன்படுத்தும் போது, போன் பயன்படுத்தும் போது காதில் ஹெட்போன் இல்லாத ஒருவரை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அந்தளவு நம் வாழ்வில் இன்றியமையாத ஒரு பொருளாக ஹெட்போன் மாறிவிட்டது.
இந்த நிலையில் ஹெட் போன்களால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து தான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
காத்து கேட்கும் திறனில் பாதிப்பு :
ஹெட்போனில் அதிகமான சத்தத்தில் பாடல்களை கேட்பது நாளடைவில் கேட்கும் திறனை பாதிக்கும். ஹெட்போன் மூலம் எழும் ஒலி அலைகள் தொடர்ந்து செவிப்பறையை தாக்குவதால் எதிர்காலத்தில் பாதிப்புகள் வரக்கூடும் என கூறுகின்றனர்.
இதயத்திற்கு ஆபத்து :
காதுக்கு ஹெட்போனை அதிக நேரம் பயன்படுத்தினால் இதயத்துக்கும் ஆபத்து ஏற்படும் என சொல்லப்படுகிறது. ஹெட்போனில் இருந்து அதீத ஒலியால் இதயம் வேகமாக துடிப்பதுடன் நாளடைவில் பாதிப்புகள் வரலாம்.
தலைவலி :
ஹெட்போன்களில் இருந்து வெளியேறும் மின்காந்த அலைகள் மூலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகளை வரலாம் என கூறப்படுகிறது.
மன அழுத்தம் ஏற்படும் :
மன அழுத்தம் போக வேண்டும் என்பதற்காக பலரும் ஹெட்போனில் பாடல்கள் கேட்பது, இப்போது வழக்கமாகி விட்டது. ஆனால், நீண்ட நேரம் ஹெட்போனை பயன்படுத்தினால், அதுவே மனா அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுத்தும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே ஹெட்போன்களை நீண்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால், நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும்.