Homeவாழ்க்கை முறைபல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் என்ன நடக்கும் தெரியுமா..? மருத்துவர்கள்...

பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்த்தல் என்ன நடக்கும் தெரியுமா..? மருத்துவர்கள் விளக்கம்

வேலை பார்க்கும் முறை

இன்றைய காலகட்டத்தில் 8 முதல் 10 மணி நேரம் வரை அமர்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையானது மிகவும் பொதுவாகிவிட்டது. ஆனால், ஒரே இடத்தில் உற்கார்ந்து வேலைபார்க்கும் வாழ்க்கை முறையானது, ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால், நமது வேலைகள் தொடர்பாக தொடர்ச்சியாக ஆறு மணி நேரம் அல்லது அதற்கும் மேல் உக்கார வேண்டியிருந்தால் என்ன செய்து? இது போன்ற சூழ்நிலையில் உடலில் என்ன நடக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கீங்களா? அதை பற்றி இந்த பதிவில் விவரமாக பார்க்கலாம்.

இது குறித்து மும்பையில் உள்ள பரேல் க்ளெனீகிள்ஸ் மருத்துவமனையின் டாக்டர் மஞ்சுஷா அகர்வால் பேசியுள்ளார். இதில் அவர், கொஞ்சம் கூட இடைவேளை எடுக்காமல் நீண்ட நேரம் ஒரே இடத்தில அமர்ந்து வேலை பார்ப்பது, ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் தீங்கு விளைவிக்கும் என கூறியுள்ளார்.

ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்ப்பு

இது உங்கள் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் அபாயத்தையும் அதிகரிக்கும். இது தவிர அதிகப்படியான எடை அதிகரிப்புக்கு வலிவைத்து, உடல் பருமனாக மாற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால், அதிகமாக உட்கார்ந்திருந்தது உங்கள் வளர்சிதை மாற்றத்தை கணிசமாக குறைத்து, எடை குறைப்புக்கான முயற்சிகளை கடினமாகும் என்றும் டாக்டர் அகர்வால் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஊட்டச்சத்து மற்றும் உடற்பயிற்சி நிபுணரான ஷிகா சிங் பேசியுள்ளார். நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கு ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்க்கும் வாழ்க்கை முறையும் ஒரு காரணமாகும் என கூறியுள்ளார்.

மேலும் குறைவான உடல் செயல்பாடு, வயிற்றுப்பகுதி உட்பட உறுப்புகளை சுற்றி கொழுப்பு படுவதற்கு பங்களிக்கிறது. இது இன்சுலின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்திடும் என டாக்டர் ஷிகா சிங் கூறியுள்ளார்.

நீங்கள் சாய்வது அல்லது முதுகு குனிவது போன்ற மோசமான தோரணையுடன் அமர்ந்திருந்தாள், வழக்கத்தை விட அடிக்கடி முதுகு அல்லது கழுத்து வலியை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகமாகும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலப்போக்கி இது கொழுப்பின் அளவையும், இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்க செய்யும். இந்த காரணங்களால் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதால், உங்கள் மூட்டுகள் ஸ்ஃடிப் ஆகிவிடும். இதனால் பல மணி நேரம் கழித்து அசைப்பது கடினமாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இதனால்தான் மக்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே சுறுசுறுப்பாக இருக்க ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 முதல் 5 நிமிடங்கள் இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், உங்கள் கால்களை ஸ்ஃடிப்நெஸ் ஆகாமல் பார்த்துக்கொள்ள, அடிக்கடி வளைக்கவும், நீட்டவும் அல்லது சில நிமிடங்கள் நடக்க வேண்டும் என்றும் டாக்டர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img