Homeஆரோக்கியம்காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் பிரச்சனைகள்..

காலை உணவை தவிர்த்தால் ஏற்படும் பிரச்சனைகள்..

காலை உணவு

நம்முடைய தற்போதைய பரபரப்பான காலகட்டத்தில் பெரும்பாலானோர் காலை உணவை சரியாக சாப்பிடுவதில்லை. வேலைப்பளு காரணமாகவே இவை அதிகமாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதே போல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூட காலை உணவை சரியாக எடுத்துக்கொள்வதில்லை என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அதற்கு பதிலாக ஒரு சில பேர், காலையில் டீ அல்லது காஃபி குடித்துவிட்டு, அதனுடன் ஓரிரு பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். இதை காலை உணவு என நினைத்துக்கொள்ளும் அவர்களுக்கு தெரியவில்லை. இது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு என்று. தொடர்ந்து காலை உணவை தவிர்த்து வரும்பொழுது கண்டிப்பாக உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிறுவயதில் இருந்து காலை உணவை தவிர்ப்பதன் மூலம் ஞாபக சக்தி குறைபாடு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. காலை உணவு மிகவும் முக்கியமான ஒன்று மூளைக்கு தேவையான ஆற்றலை அளிப்பதற்கு காலை உணவு தேவையான ஒன்று இருப்பதை அனைவரும் நினைவில் வைக்க வேண்டும்.

நினைவாற்றலை அதிகரிப்பதற்கும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதற்கும் காலை உணவு மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுதானிய உணவுகள்

காலை உணவாக சிறுதானிய உணவுகள் எடுத்து கொள்வது மிகவும் சிறந்தது ஆகும். காலை உணவாக கார்போஹைட்ரேட், புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளும் பொழுது நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும். அதே போல் நம்மை புத்துணர்ச்சியாக வைத்து கொள்வதற்கு உதவும்.

காலை உணவை எடுத்து கொள்ளாமல் இருப்பவர்களுக்கு உடலுக்கு தேவையான அன்றாட ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் உடலில் பல உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

காலை உணவை தவிர்க்கும் குழந்தைகள் அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது எனவே காலை உணவு அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. மூன்று வேளையும் சரியான நேரத்தில் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.

தொடர்ந்து காலை உணவை தவிர்த்து வந்தால் இதய நோய், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல நோய்கள் நம் உடலில் ஏற்பட்ட அதிக வாய்ப்புகள் உள்ளது என்கின்றனர்.

காலை உனவை தவிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி ஆரோக்கிய குறைபாடு ஏற்படுகிறது. எனவே காலை உணவு அனைவருக்கும் மிகவும் முக்கியமான விஷயமாகும்.

மூன்று வேளையும் சரியான நேரத்தில் சாப்பிடுவது நம் ஆரோக்கியத்திற்கு நன்று. அதே போல் காலை உணவையும் தவிக்காமல் சாப்பிடுவது நம் எதிர்காலத்திற்கும் நன்று என்பதை மனதில் உறுதிப்படுத்துங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Must Read

spot_img